Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதஞ்சலி நிறுவனத்தின் அலட்சியத்தால் ஒரு யானை பலி, 2 யானைகள் காயம்

அசாமில் 150 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,000 கோடி செலவில் பாபராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் மூலிகை பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு 10 அடி குழியில் ஒரு பெண் யானை ஒன்று நேற்று தவறி விழுந்தது. அதை மீட்பதற்குள் மேலும் ஒரு ஆண் யானை மற்றும் ஒரு குட்டி யானை அந்த குழிக்குள் தவறி விழுந்தன. இதனால் அந்த பெண் யானைக்கு கால் மற்றும் தலைப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆண் யானை குழியில் இருந்து வெளியேற, குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.  இதையடுத்து பெண் யானையை மீட்க வனத்துறையினர் போராடினர். ஆனால், பலத்த காயம் ஏற்பட்டதால் அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், அந்த ஆண் யானை மற்றும் குட்டி யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதஞ்சலியின் பூங்கா அமையும் இடம் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதி என்று கூறப்படுகிறது. இதனால் பதஞ்சலி நிர்வாகத்தின் கவனக்குறைவாலேயே யானை உயிரிழந்ததாக அந்நிறுவனத்துக்கு கடும் கண்டனங்கள்  தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அசாம் மாநில வனத்துறை அமைச்சர் பரிமளா ராணி கூறுகையில், "யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

படங்கள்: பி.டி.ஐ

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close