Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜன்தன் யோஜனா திட்டத்தில் ரூ.64,252 கோடி டெபாசிட்

வங்கி கணக்கு இல்லாதவர்களுக்காக மத்திய அரசு ஜன் தன் யோஜனா திட்டத்தை கொண்டு வந்தது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் விவகாரத்தால் இந்த திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் ஜன் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குளில் தற்போது வரை 25.58 கோடி வங்கிக் கணக்குகளில் ரூ.64 ஆயிரத்து 252 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் ரூ,10,670 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்காளத்தில் ரூ. 7,826 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close