Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நாடு முழுவதும் 67 ஐ.எஸ் ஆதரவாளர்கள் கைது'- ராஜ்நாத் சிங்

ஹைதராபாத்தில் டிஜிபி, ஐஜிபி மாநாடு நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், 'விரைவில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதைமுன்னிட்டு தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. அந்த இயக்கத்தை சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்தியா அந்த சவாலை ஏற்க தயாராக உள்ளது. தற்போதுவரை நாடு முழுவதும் 67 ஐ.எஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்தான். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் அறிவிப்பு மூலம் தீவிரவாதிகள் முற்றிலும் முடங்கி போயுள்ளனர். அவர்களுக்கு செல்லும் நிதி தடுக்கப்பட்டுள்ளது'. என்றார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ