Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயதாரணி முதல் தமிழிசை வரை.... 500 ரூபாயை எப்படிச் செலவழித்தார்கள்?

500

ழைய 500 மற்றும் 1000 ரூபாய் வாபஸ் பெறப்பட்டதுதான் இப்போதைய, நாட்டின் உச்சாணியில் அமர்ந்திருக்கும் பிரச்னை. பணத்தை வங்கியில் செலுத்த ஒரு வரிசை. மீண்டும் பணத்தை எடுக்க ஒரு வரிசை. வங்கியில் இல்லையா? ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்க ஒரு வரிசை. எடுத்த பணம் 2000 ரூபாய்த் தாளாக இருந்தால் அதனை மாற்றுவதில் ஏற்படும் சிக்கல் என மக்கள் கடந்த பதினைந்து நாட்களுக்கும் மேலாகப் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால், அரசியல்வாதிகள் எப்படி? அவர்களும் இதே சிக்கல்களைச் சந்திக்கிறார்களா? சில அரசியல் புள்ளிகளிடம் கேட்டோம்.

ஒரு ஐ-டிராப்ஸ்! இரண்டு புத்தகம்! இரண்டேகால் மணிநேரம் க்யூவில்

”என் கையில் இன்றைக்கு பழைய 500 ரூபாய்தான் இருந்தது. என் கண்ணுக்கு ஐ-டிராப்ஸ் வாங்கினேன்.  அதற்கு 90 ரூபாய் செலவு போக மீதிப் பணம் தர கடைக்காரரிடம் சில்லறை இல்லை. மதியம் வாங்கிக்கொள்ளச் சொன்னார். மதியம் சென்றேன். 310 ரூபாய்தான் தந்தார். 'மீதம் 100 ரூபாய் நாளைக்குக் கிடைத்தால் தருவேன்' என்றார். என் வீட்டுக்கு இரண்டு வேலையில்லாப் பட்டதாரிகள் புத்தகம் விற்க வந்தார்கள் மீதம் இருந்த 310- ரூபாயில் அவர்களிடம்  புத்தகம் வாங்கியது போக கையில் 10 ரூபாய்தான் இருக்கிறது. நாளைய நிலைமை நாளைக்கு. இப்படித்தான் போன வாரம் என் மகனுக்கு கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக மதுரை ஸ்டேட் பாங்க் கிளையின் வாசலில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றேன். 5000 ரூபாய் கட்டவேண்டும். இரண்டேகால் மணிநேரம் ஆனது. எனக்கு முன்பு ஒரு சிலர் நின்று கொண்டிருக்கும்போது பணம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு சென்னைக்கு நேரில் வந்து எப்படியோ சமாளித்துப் பணத்தைக் கட்டினேன்.எனக்கு இது பெரிய சிக்கல்தான். இது மக்களின் மீது மோடி தொடுத்திருக்கும் அறிவிக்கப்படாத போர்” என்கிறார் அ.தி.மு.க-வின்  துணைக் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.

ஒரு டஜன் முட்டைக்கு 2000 ரூபாய்

”வெளியே சென்றால்  எங்களுக்கு,  சாப்பாட்டுச் செலவு, காருக்கான பெட்ரோல் செலவு, ஆங்காங்கே டீ, காபி குடிக்க கொஞ்சம் சில்லறை, வழியில் பார்க்கறவங்க வயித்துப் பசின்னு கேட்டா கொடுக்க 10, 20 ரூபாய். இதைவிட அரசியல்வாதிகளுக்கு அன்றாடம் பெரிய செலவுகள் என்ன இருந்துடப் போகுது. மோடி அறிவிச்ச பிறகு வங்கியில் வரிசையில் நின்று 2000 ரூபாய்க்கு 20 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொண்டு வந்தோம்.மற்றபடி வீட்டுத் தேவைக்காக திடீர் என்று காபித்தூள், காய்கறி வாங்க சிக்கல் ஏற்பட்டது. டஜன் முட்டை 50 ரூபாய். கடைக்காரனிடம் 2000 ரூபாய் தாளை நீட்டினால் அதற்கு சில்லறை அவரிடமும் இல்லை. கடன் சொல்லிதான் வாங்கிட்டு வந்தோம். ஏ.டி.எம், பேடிஎம் எல்லாம் அங்கே செல்லுபடியாகுமா?” என அங்கலாய்த்தார் காங்கிரஸின் எம்.எல்.ஏ விஜயதாரணி.

நானெல்லாம் வறுமை கோட்டுக்கு கீழே..

ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறுகையில், “நாங்கலெல்லாம் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கின்றோம். அதனால், 500 ரூபாய் இருப்பதெல்லாம் பெரிய விஷயம்.காலையில் நடைபயிற்சி போகும்போது என்னைப் பார்ப்பதற்காகவே ஊனமுற்றவர்கள், உழைக்கமுடியாத நிலையில் இருப்பவர்கள் யாராவது நிற்பார்கள். அவர்களுக்குக் கொடுக்க 50,20 சில்லறை எப்போதும் இருக்கும். எங்களுக்கு எரிபொருள் செலவு தாண்டி எதுவும் பெரிய விதத்தில் பணம் தேவைப்படாது. முழுமையாக 500,1000 ரூபாய் வைத்திருக்கும் அளவுக்கு மடியில் கனமில்லை” என்றார்.

கோயிலுக்கே தினம் 100 ரூபாய் செலவாகும்

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை கூறுகையில்,”எனக்கு சமையல் எல்லாம் தெரியாது.அதனால் ஹோம் மேக்கிங் தொடர்பாக எனக்கு பணம் எதுவும் தேவைப்படுவதில்லை. எப்போதும் காலையில் கோயிலுக்குப் போவேன். அங்கே சாமிக்கு பூ வாங்குவது, பூசாரிக்கு என எனக்கு தினம் நூறு ரூபாய் செலவாகும். கோயில் வெளியே பூ விற்பவர்கள் நாலு பேர் இருந்தால் நாலு பேரிடமும் பூ வாங்குவேன். அதில் 50 அல்லது 60 ரூபாய் செலவாகிடும். கமலாலயம் போனால் அங்கே என்னைப் பார்க்க நோயாளிகள் வருவார்கள். அவர்களுக்கு மாத்திரை தேவைப்பட்டால் கையில் இருக்கும் பணத்தைக் கொடுப்பேன். கீரைக்கட்டு எங்க கிடைச்சாலும் வாங்குவேன் அதற்கு 20 அல்லது முப்பது ரூபாய் செலவாகும். மற்றபடி எனக்குப் பெரிய செலவு இருந்ததில்லை. பணமுடக்க சூழலில் கூட சிக்கனமாகத்தான் பணத்தைச் செலவு செய்தேன். எங்கள் வீட்டிலிருந்து போரூர் போய்தான் வரிசையில் நின்று பணத்தை ட்ராப் செய்தேன்”

அடியாத்தி! அப்புடிங்களா!?

-ஐஷ்வர்யா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close