Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காலிஸ்தான் தலைவர் ஜெயிலில் இருந்து எஸ்கேப்

பஞ்சாப்பில் உள்ள நபா சிறைச்சைலையிலிருந்து காலிஸ்தான் விடுதலைப்படை தலைவர் மற்றும் நான்கு குற்றவாளிகள் தப்பித்துள்ளனர்.


இன்று காலை, பாதுகாவலர்கள் போல் உடை அணிந்து ஆயுதங்களுடன் 10 பேர் நபா சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் காலிஸ்தான் விடுதலைப்படை தலைவர் ஹர்மிந்தர் சிங் மின்டூ மற்றும் குர்ப்ரீத் சிங், விக்கி கோண்ட்ரா, நிதின் டியோல், விக்ரம்ஜீத் சிங் உட்பட ஐந்து குற்றவாளிகளையும் தப்பிக்கச் செய்துள்ளனர் . பஞ்சாப் முழுக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்துக்கு பஞ்சாப் மாநில அரசு, 'நபா சிறையின் டி.ஜி.பி-யை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். சிறையின் மேற்பார்வையாளர் மற்றும் துணை மேற்பார்வையாளர் ஆகியோர் பணிநீக்கம் செய்ப்பட்டுள்ளார்கள். தப்பித்த கைதிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம்.' என்று துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் கூறியுள்ளார்.  

இந்த விஷயம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் பஞ்சாப் டி.ஜி.பி-யிடம் விளக்கம் கேட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close