Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநங்கையருக்கு ரயில்வே அளித்த மரியாதை!

ரயில்வே

ந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான ஐ.ஆர் .சி.டி.சி-யின் பயணச்சீட்டு முன்பதிவு இணைய தளத்தில்,மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி ஆன்லைன் பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் ரத்து செய்யப்படும்போது, பயணம் செய்பவரின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்வோர் நிரப்ப வேண்டும்.

அதன்படி ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் திருநங்கையர்களுக்கு, அவர்களது பாலினத்தை குறிப்பிடும்படியான  வசதி அளிக்கப்படாமல் இருந்தது.இதை வழக்கறிஞர் ஒருவர் சுட்டிக்காட்டி, மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்வதற்கு வசதி செய்யப்பட வேண்டும் என்று ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ரயில்வே துறை, இணைய தளம் மற்றும் கவுன்டர்களின் ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யப்படும் போது, மூன்றாம் பாலினத்தவர் என்ற பதிவை செய்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ரயில்வே

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக, ரயில்வேதுறையை அணுகுமாறு உத்தரவிட்டனர். அதன்படி, மூன்றாம் பாலினத்தவர் என்று பிரிவை முன்பதிவு செய்யும்போது குறிப்பிட வலியுறுத்தி, ரயில்வே அமைச்சகத்தை நாடினார்.2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில், இருபாலினத்தையும் சேராத குறைபாடு உள்ள திருநங்கையர் அனைவரையும் மூன்றாம் பாலினத்தவர் என்றே கருத வேண்டும் என ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசியல்சாசன சட்டத்திருத்தத்தின்படி, மூன்றாம் பாலினத்தவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ரயில்வே சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.எனவே, ரயில்வே முன்பதிவு / ரத்து படிவங்களிலும், இணையதள முன்பதிவிலும் ஆண், பெண் என்று இடம்பெற்று இருக்கும் பகுதியில் மூன்றாம் பாலினத்தவர் என்ற வாய்ப்பும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் ரயில்வே சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- சி.வெங்கடசேது

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ