Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஞ்சலகங்களில் ரூ.32,631 கோடி டெபாசிட்!

 

அஞ்சலகங்களில் ரூ.32,631 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 24-ம் தேதி வரை அஞ்சல் நிலையங்களிலும் ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சலகங்களில் ரூ. 32,631 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 1.30 லட்சம் அஞ்சலகங்கள் கிராமப்புறங்கள் மற்றும் 25 ஆயிரம் அஞ்சலகங்கள் நகர்ப்புறங்கள் ஆகும். அதே போல் கடந்த 10-ம் தேதி முதல், 24-ம் தேதி வரை அஞ்சலகங்களில் ரூ. 3,680 கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த காலக்கட்டத்தில் ரூ.3,583 கோடி அஞ்சலகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்