Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

100% மின்னணு பரிமாற்றத்தை நோக்கி கோவா

இந்தியாவில் முதல் முறையாக முற்றிலும் மின்னணு பரிமாற்றம் மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளப்போகும் மாநிலமாக கோவா மாறவுள்ளது.


டிசம்பர் 31 வரை இந்த புதிய திட்டம் பற்றி கோவா அரசு மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பயிற்சி கொடுக்கவுள்ளது. 

நவம்பர் 8-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் Demonetisation, Cashless Economy என்று பொருளாதார வார்த்தைகளை பயன்படுத்தியே பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இவையெல்லாம் என்னவென்று கண்டுபிடித்து புரிந்துகொள்ளவே பலர் சிரமப்படும் நிலையில், நடைமுறையிலேயே ஒரு ரொக்கமில்லாத பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தவுள்ளது கோவா அரசு. வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல்  ஆப்பிள் முதல் ஆப்பிள் ஐபோன் வரை எல்லா பொருட்களையும், கோவாவில் ரொக்கமில்லாமல் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

போன் மூலம் எல்லா பரிவர்த்தனைகளும் நடைபெறும். ஒரு கடைகாரருக்கோ அல்லது வீட்டு வாசலில் காய்கறிகளை விற்பவருக்கோ பணம் கொடுக்க வேண்டும் என்றால் *99# என்ற எண்ணை பயன்படுத்தினால் போதும். தேவையானவர்கள் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படும்.  இந்த சேவையைப் பயன்படுத்த ஸ்மார்ட் போன் தான் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கிரெடிட் கார்டுகளை ஏற்று கொள்ளும் வசதி இல்லாத கடைகாரர்கள் இதனை பயன்படுத்தலாம். அனைத்து கடைகளிலும்  கிரெடிட் கார்டு வசதி கொண்டு வரும் பணியும் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது. 

மபுசா மற்றும் பனாஜி பகுதிகளில் இந்த சேவையை பற்றிய விழிப்பு உணர்வு முகாம்கள் நடைபெறும். எனினும், ரொக்க பரிவர்த்தனைக்கு தடை விதிக்கப்படவில்லை. அதேபோல் போன் மூலம் செய்யும்  இந்த பரிவர்த்தனைகளுக்கு எந்தவித சேவை கட்டணங்களும் கிடையாது. அதேபோல், குறைந்தபட்ச அளவும் கிடையாது. 

நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிகர் அரசு மற்றும் வங்கி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை  நடத்தினார். ரொக்கமில்லா பொருளாதாரத்துக்குத் தேவையான செயல்பாடுகளைப் பற்றி அவர் பேசினார். ரொக்கமில்லா பொருளாதாரம் மோடியின் கனவு எனவும் அதனை முதலில் செயல்படுத்துவது  கோவா எனவும் அவர் கூறினார். 

"இந்தியா ரொக்கமில்லாமல் மாறினால் கோவா தான் முதலில் மாறும் என்று நினைத்தோம். அது போலவே நடந்தது. மோடியின் கனவை நினைவாக்க வேண்டும். மத்திய அரசின் ஒன்றுபட்ட கட்டண இடைமுகத்தில் (Unified Payment Interface) சேர்ந்து கொண்டால் போதும். உங்கள் போன் வங்கியாக  மாறும்." என்றார் அவர்.

"கோவாவில் பதினைந்து லட்சம் மக்களும், பதினேழு லட்சம் போன் இணைப்புகளும்  உள்ளன. 22 லட்சம் வங்கிக் கணக்குகள் உள்ளன. ரொக்கமில்லா பொருளாதாரமாக மாற அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசிடம் பதிவு செய்யும்  ஒவ்வொரு வியாபாரிக்கும்  எம்.எம்.ஐ.டி கோட் தரப்படும். பொருட்களை வாங்கும்போது இந்த எம்.எம்.ஐ.டி கணக்கை பயன்படுத்தி மக்கள் வியாபாரிகளுக்கு பணம் செலுத்தலாம். அனைவரிடமும் வங்கி கணக்கும் அதில் பணமும் இருந்தால் போதும்", என்றார் தலைமைச்  செயலாளர் ஆர்.கே, ஸ்ரீவஸ்தவா

- ம. சக்கர ராஜன்,
மாணவர் பத்திரிகையாளர்⁠⁠⁠⁠

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close