Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளா சிறையில் இ-நூலகம்

கேரளாவின் பூஜ்புரா மத்திய சிறையில், சிறைவாசிகள் பயன்படுத்தும் வகையில் இ-நூலகம் கொண்டவரப்பட உள்ளது.  கேரளாவில் இருக்கும் மிகப் பழைய சிறைகளில் ஒன்றான பூஜ்புரா சிறையில் 1,300 கைதிகள் இருக்கின்றனர். ஏற்கெனவே இந்த சிறையில் இருக்கும் நூலகத்தில் 15,000 புத்தகங்கள் இருக்கிறது. தற்போது, அங்கு இ-நூலகமும் வரப்போகிறது.


'இ-நூலகத்தைப் பயன்படுத்துவதற்கு என்றே சிறைவாசிகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும். மின்னணு பொருட்களை பயன்படுத்துவதற்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். இந்த இ-நூலகம் திட்டம் மூலம் சிறைவாசிகளுக்கு சிறை நிர்வாகத்தால் டிஜிட்டலுக்கு மாற்றப்படும் புத்தகங்களை தவிர, 'அமேசான் கிண்டில்' போன்ற இணையவழி மூலமும் புத்தகம் வாசிக்க பயிற்றுவிக்கப்படுவர். சிறைவாசிகளுக்கு புத்தக வாசிப்புப் பழக்கம் அதிகம் இருக்கும். காரணம் இங்கு அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் மிகக் குறைவு என்பதே காரணம்.' என்று இந்த திட்டத்தைப் பற்றி விரிவாக விளக்கினார் சிறை மேற்பார்வையாளர் சந்தோஷ்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close