Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உறுப்புகள் தானம் செய்ய விதிகள் எளிமையாக்கப்படும்'

உடல் உறுப்பு தானம் செய்வதற்கு இலகுவாக விதிமுறைகள் வகுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.


டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தானும் உறுப்பு தானம் செய்யப்போவதாகக் கூறிய ஜே.பி.நட்டா,'உறுப்புகள் தானம் என்பது ஒரு தேசிய இயக்கமாக மாற வேண்டும். இதன் மூலம் நாம் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக இருப்போம். உடல் உறுப்புகள் என்பது தேசத்தின் சொத்து' என்று பேசியுள்ளார்.


அவர் மேலும், 'தற்போது, சுகாதாரத் துறை அமைச்சகம், உடல் உறுப்புகள் தானத்தை எளிமையாக்க வழிமுறைகளை வகுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் மூளைச்சாவு அடைகின்றனர். அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் உடல் உறுப்புகளால்  பல லட்சக்கணக்கானவர்களை நாம் காப்பாற்ற முடியும். ஆனால், தற்போது உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக  உள்ளது. இது மாற வேண்டும்.' என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close