Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி பதவி விலக, கேரள தாத்தாவின் நூதன போராட்டம்!

கேரளாவில் உணவகம் நடத்தி வருபவர் 70 வயதான யாஹியா என்ற முதியவர். இந்நிலையில் கேரள பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஷ்ரஃப் கடக்கால் என்பவர் யாஹியா குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தை தொடர்ந்து, இவர் தன்னிடம் இருந்த ரூ.23,000 பணத்தை மாற்ற வங்கிக்கு சென்று, வரிசையில் நின்றுள்ளார். ஆனால், நீரிழிவு நோயாளியான அவரது உடல்நலம், இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதையடுத்து வீடு திரும்பிய அவர் தனது தலைமுடியில் இருந்து பாதி முடியை எடுத்துள்ளார் யாஹியா. குறிப்பாக மோடி ஆட்சியில் இருந்து விலகும்வரை இதுதொடரும் என அவர் சபதம் எடுத்துள்ளார்.

அஷ்ரஃப் அந்த பதிவில் மேலும் கூறுகையில், யாஹியா தினசரி நாளிதழ்கள் வாசிக்கும் பழக்கம் உடையவர். தனது வாடிக்கையாளர்களிடம் அன்பு பாராட்டுபவர் என்று கூறியுள்ளார். அவரது வேலைக்கு பொருத்தமாக இருப்பதால் அவர் நைட்டி உடை அணிந்து பணி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: IndiaToday

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ