Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோலியை அணியில் எடுக்க தயங்கிய தேர்வுக்குழு: போட்டுத்தாக்கிய சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியில் இல்லாவிடினும் தன்னுடைய அதிரடி கருத்துகளால் வலம் வந்து கொண்டிருக்கிறார் சேவாக். தற்போது இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு வர்ணனை செய்து வருகிறார். அப்போது, இன்றைய போட்டியில் அவர் பேசுகையில், "கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கோலியை கைவிட கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு முடிவு செய்தது. அதற்கு முந்தைய தொடர்களில் கோலி பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை அணியில் எடுக்க திட்டமிட்டிருந்தனர்.

அப்போது நான் அணியில் துணை கேப்டனாக இருந்தேன். இதையடுத்து நானும், கேப்டன் தோனியும் கோலிக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க பரிந்துரை செய்தோம். அந்த டெஸ்ட்டில் கோலி 44,72 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தப் போட்டியில் அவர் சதமடித்தார்". என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close