Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கிகளில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் தளர்வு!

வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் இன்று (29.11.2016) முதல் தளர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, வரம்பிற்கு கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்கலாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக இன்று முதல் வங்கிகளில் எடுக்கும் பணத்தை, 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவையை பரிசீலித்து பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால், பணம் டெபாசிட் செய்ய ஏற்படும் தயக்கத்தைப் போக்க இந்த நடவடிக்கை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.வங்கிகளில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் இன்று முதல் தளர்த்தப்படும் என்றும், வங்கிகளில் எடுக்கும் பணத்தை 500, 2,000 ரூபாய் நோட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக திங்கள்கிழமை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளில் இன்று முதல் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை பரிசீலித்து தேவைப்படும் பணத்தை வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கிகளில் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், கட்டுப்பாடுகளால் பணத்தை வங்கியில் செலுத்த தயங்குவதை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே வங்கி கணக்கில் இருந்து ரூ.24,000 மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  இதை விட கூடுதல் தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்