Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“க்யூல நின்னவரே இராணுவ வீரர்தானாம்..!”- அடேங்கப்பா ட்விஸ்ட்

இராணுவ

ழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டம் நாடு முழுதும் ஒரு தரப்பினரிடம் வரவேற்பைப் பெற்றாலும், இன்னொரு தரப்பினரிடம் எதிர்ப்பையும் கிளப்பி உள்ளது. டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள திட்டம், ஏ.டி.எம் வரிசைகளில் பல மணி நேரம் காத்து நிற்கும் மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஏ.டி.எம்-களில் வெறும் 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டும் கிடைப்பதால்  அதை சில்லறை மாற்ற படாதபாடுபடுவதால்  "ப்ளான் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா!” என வடிவேலு பாணியில் பெரும்பாலான மக்கள் நொந்து கொள்கின்றனர். மோடியின் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பலர், " எல்லையில் இராணுவ வீரர்களே கால்கள் கடுகடுக்க நின்று காவல் காக்கும்போது நாட்டு நலனுக்காக சிலமணி நேரம் ஏ.டி.எம் வரிசையில் நிற்கக் கூடாதா?’' என்று  கேள்விகள் எழுப்புகின்றனர்.

ஆனால், உண்மையில் முன்னாள் ராணுவ வீரர்களும் தங்கள் பென்ஷன் பணத்தை ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்க பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப்பின் லூதியானாவைச் சேர்ந்த  முன்னாள் ராணுவ வீரர் தர்ஷன் தில்லான்  ஒரு கடிதம்  ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.அதில், "அண்மையில் ஏ.டி.எம் வரிசையில் வெகு நேரம் நின்று கொண்டிருந்தேன். எவ்வளவு நேரம் நிற்பது என நான் கொஞ்சம் சலித்துக்கொண்டேன்.

எனக்குப் பின்னால் இருந்த நபர் ஒருவர்,  'ராணுவ வீரர்கள் எல்லையில் கால் கடுக்க காவல் காக்கும் போது, நான் வரிசையில் நிற்கக் கூடாதா' எனக் கேட்டார். பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெற்றதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்.  நானும் ராணுவத்தில் இருந்தவன்தான். நீங்கள் சொல்வதுபோல எல்லையில் 20 வருடங்கள் கால் கடுக்க நின்றுள்ளேன்.

ஆனால் அதற்கான பென்ஷனை எடுக்கதான் பல மணி நேரமாக ஏ.டி.எம் முன்பு வரிசையில் நிற்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள். மேலும் தேச பக்தியை ஏ.டி.எம்  க்யூவில் நின்றுதான் காண்பிக்க வேண்டியதில்லை. தவறு நடக்கும்போது ஒன்றாகக் கூடி நின்று தவறைச் சுட்டிக்காட்டுவதுதான் தேசபக்தி. அப்படி தேசபக்தி இருந்தால் எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான ’ஒரே ரேங்க், ஒரே பென்ஷன்’ திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் ” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து  ராணுவ லெப்டினண்ட்டாக இருந்த தில்லானுக்கு ஆதரவு பெருகி வருகிறது. விரைவில் சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாப்பில் பி.ஜே.பி-க்கு எதிராகக் களம் இறங்கி இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, தில்லானை தங்கள் கட்சியில் வந்து இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. வேறு சில கட்சிகளும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

-ஐஷ்வர்யா

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ