Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்தது ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி தனது 4G சேவையைத் தொடங்கியது. ஜியோ தனது சேவையை ஆரம்பித்து மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில், 5 கோடி வாடிக்கையாளர்களை கடந்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்துக்கு 5 கோடி வாடிக்கையாளர்களை கடக்க 12 ஆண்டுகள் ஆனது, வோடாபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 13 ஆண்டுகள் ஆனது. 

ஒரு நாளைக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் தன் சேவைக்குள் இணைத்ததாக கூறப்படுகிறது. 'குறைந்த காலத்தில் 10 கோடி வாடிக்கையாளர்களை தனது சேவைக்குள் கொண்டு வருவதே ஜியோவின் இலக்கு' என்று அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 3-ம் தேதிக்குள் ஜியோ சிம் வாங்குபவர்களுக்கு, டிசம்பர் 31-ம் தேதி வரை இலவச சேவை அளிக்கப்படும் என்று ரிலையன்ஸ் கூறி இருக்கிறது. வாய்ஸ் அழைப்புகளை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ