Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நீட்டிப்பு இல்லை

 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகளை வங்களில் டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அதிரடியாகக் கூறியுள்ளது. மேலும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற டிசம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை நோட்டுகள் என, வங்கிகளில் போதிய இருப்புப் பணம் உள்ளதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு மத்திய அரசு அறிவித்தது.பொது சேவை நிறுவனங்களான பெட்ரோல் பங்குகள்,அரசு மருத்துவமனைகள் போன்றவற்றில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றலாம். அதன்படி, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற குறிப்பிட்ட காலக் கெடு கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் அந்த காலக்கெடு  நீட்டிக்கப்பட்டு சலுகைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்னும் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close