Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 முதல் 2000 ரூபாய் வரை கரன்சிகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது...?

ரூபாய்

                     ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கு எவ்வளவு செலவாகிறது? புகைப்படத் தொகுப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்..

லகின் இரண்டாவது பெரிய பணத் தாள் நுகர்வோர் நாடாக இந்தியா உள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளுடன் இரண்டறக் கலந்துவிட்ட இந்திய ரூபாய் நோட்டுகள், பல அடுக்கு பாதுகாப்புடன் தயாரிக்கப்படுகின்றன. பிரத்யேகமான காகிதங்கள், மை, பாதுகாப்பு அம்சங்கள், அச்சிடும் செயல்முறைகள் என ரூபாய் நோட்டுகளில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு மிகப்பெரிய தொகையும், தொழில்நுட்பமும் அவசியம் தேவை.

ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க, இந்தியா 22,000 மெட்ரிக் டன் காகிதங்களை பயன்படுத்துகிறது. பணம் அச்சடிப்பதற்கான மொத்தசெலவில் 40%, காகிதங்களுக்காக செலவிடப்படுகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான water marked காதிதங்களை, ஜெர்மனியைச் சேர்ந்த Giesecke & Devrient மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த De La Rue என்ற நிறுவனங்களிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இறக்குமதியாகும் காகிதங்கள், Bhartiya Reserve Bank Note Mudran Pvt Ltd  மற்றும் Security Printing and Minting Corporation of India Ltd  என்ற அச்சகங்களில் பணமாக உருவெடுக்கிறது. 

10, 20, 50, 100, 500, 1000 மற்றும் 2000 என பழையது முதல் புதுவரவு வரை அனைத்து பணங்களும் இங்குதான் அச்சாகி மக்களின் பயன்பாட்டிற்கு வருகின்றன. 10 ருபாய் அச்சடிக்க மத்திய அரசு, எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா? இந்தியாவில் தற்போது உயர் மதிப்புடைய 2,000 ரூபாய் நோட்டு அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது என்பதை அறிந்தால் நீங்கள் திகைத்துப் போவீர்கள். 10 முதல் 2,000 ரூபாய் வரை ஒவ்வொரு நோட்டையும் அச்சடிப்பதற்கு, எவ்வளவு செலவாகிறது? என்பதை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்..

-ஆ.நந்தகுமார்

இன்போகிராபிக்ஸ்- ஹாரிஃப் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ