Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரம்: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு  

ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை அலுவலர் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, நர்கோட்டாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள், அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதே பிரச்னை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. அவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close