Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வீடு திரும்பி உள்ளார்.

வைரஸ் காய்ச்சல் காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் உள்ள ஶ்ரீகங்கா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று முழுவதுமாக உடல்நலம் தேறி தற்போது வீடு திரும்பி உள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்ட சோனியா காந்தி, தற்போது நேற்று மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தற்போது உடல் நலம் தேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ