Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஞ்சாப் கூடுதல் டி.ஜி.பி சஸ்பெண்ட்... ஐ.பி.எஸ் அதிகாரிகள் போர்கொடி

கடந்த ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் மாநில நபா சிறையிலிருந்து காலிஸ்தான் விடுதலைப்படை தலைவர் ஹர்மிந்தர் சிங் மின்டூ மற்றும் நான்கு பேர்கள் தப்பினர். இந்த சம்பவத்துக்காக, பஞ்சாப்பின் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி-யான எம்.கே.திவாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் அம்மாநில துணை முதல்வர் சுக்பிர் பாதல்.

'இந்த உத்தரவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நாம் அனைவரும் திவாரிக்கு பின்னால் ஒன்றாக நிற்க வேண்டும். இதுவரை பஞ்சாப் அரசு, எதுவும் பேசாமல் இருந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் அடுத்தகட்ட போராட்டத்தில் இறங்குவோம். தேவைப்பட்டால், மற்ற மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளுடனும் கலந்து பேசி அவர்களையும் போராட்டத்தில் இணைந்து கொள்ள அழைப்போம்' என்று மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த அனைத்து எதிர்ப்பு குரலுக்கும் காரணம் எம்.கே.திவாரி, ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் தான் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

பஞ்சாப் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கூட்டுப் போராட்டத்தை சுட்டிக்காட்டி, தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தங்களுக்கு ஒரு அநீதி நடந்தால் அதையும் ஒரே அணியில் நின்று எதிர்ப்பு காட்ட வேண்டும் என்று பேச ஆரம்பித்து இருக்கின்றனர். தமிழகத்தில் டி.ஐ.ஜி - ஐ.ஜி மற்றும் ஐ.ஜி - கூடுதல் டி.ஜி.பி பதவி உயர்வுக்காக கடந்த 11 மாதங்களாக 15 ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் முதல்வர் அலுவலகம் வரை போராடிப் பார்த்தும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. தங்களுக்காக மற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ