Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மம்தாவை கொல்ல சதியா?

மம்தா பானர்ஜியை ஏற்றிச் சென்ற விமானம், தரையிறக்குவதற்கு முன்பாக, வானத்தில் சுமார் 30 நிமிடங்கள் பறந்து கொண்டிருந்ததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், மம்தாவை கொல்வதற்கு சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று மாலை 7.35 மணியளவில், மம்தா சென்ற தனி விமானம், பாட்னா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இரவு 9 மணியளவில், கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால்  தரையிறங்குவதற்கு முன் 30 நிமிடங்கள் வானில் பறந்து கொண்டிருந்துள்ளது.

இதற்கு அதிகாரிகள் தரப்பில், விமானத்தில் எரிபொருள் குறைபாடு ஏற்பட்டதால் தரையிறங்க தாமதமானதாக விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், இந்த சம்பவம் மம்தாவை கொல்வதற்கு செய்த சதி என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இன்று நாடாளுமன்றத்தில்  மம்தா விமான தாமதம் விவகாரம், திட்டமிட்ட சதி  எனக் கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்துடன் ரூபாய் நோட்டு விவகாரத்தாலும் கடும் அமளி நிலவியதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ