Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மார்ச் 2017 வரை JIO முழுவதும் ஃப்ரீ!

இன்று ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி, ஜியோ பற்றி பேசினார். டிசம்பர் நான்காம் தேதி முதல் ஒவ்வொரு புதிய ஜியோ வாடிக்கையாளருக்கும் ஜியோ டேட்டா, வாய்ஸ், வீடியோ, ஆப்ஸ் என அனைத்து சேவைகளும் 2017 மார்ச் 31-ம் தேதி வரை இலவசமாக கிடைக்கும் என அறிவித்துள்ளார். இதன் பெயர் "JIO HAPPY NEW YEAR OFFER". 

மேலும், பேஸ்புக், வாட்ஸ்அப், ஸ்கைப் விட ஜியோ மிக வேகமாக வளர்ந்து, உலகின் வேகமான டெக் நிறுவனமாக உருவெடுத்துள்ளதாக கூறினார். 'உள்நாட்டு அழைப்புகள் எப்போதும் இலவசம்தான். ஒவ்வொரு நாளும் 6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ 4ஜியில் சேர்கிறார்கள்' என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கை வரவேற்ற முகேஷ் அம்பானியின் அடுத்த அஸ்திரம் மைக்ரோ - ATMகள். JioMoney மூலம் லட்சக்கணக்கான இடங்களில் ஜியோ மைக்ரோ-ஏடிஎம்கள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் சிறு வணிகர்களும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு எளிதாக மாறிக்கொள்ளலாம் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close