Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

344 மருந்துகளுக்கு தடை நீக்கம்

ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் எனப்படும் எஃப்.டி.சி மருந்துகளுக்கு மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். 


ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் (Fixed Dose Combination)  மருந்துகள் உடலுக்கு உகந்தது அல்ல. இந்த மருந்துகளுக்கு மாற்று இருக்கிறது என்ற நோக்கில் மத்திய அரசு 344 மருந்துகளுக்கு தடை விதித்தது. 


இதில் விக்ஸ் ஆக்‌ஷன் 500 மற்றும் கோரெக்ஸ் டானிக் போன்றவையும் அடங்கும். இரண்டு மாதங்களாக இது குறித்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவில் கிட்டத்தட்ட 40,000 ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் மருந்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ