Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#Gold புதிதாக நகை கட்டுப்பாடு இல்லை : நிதியமைச்சகம் விளக்கம்

வருமான வரித் திருத்த மசோதாவில் நகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீடுகளில் தங்கநகை வைத்திருப்பது குறித்த குழப்பத்துக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

நிதி அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ’வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் நகைகளுக்கு புதிதாக எந்த கட்டுப்பாடும் இல்லை.  வருமானத்திற்கு அதிகமான நகை வைத்திருந்தால் வழக்கமான வரிவிதிப்பு நடைமுறையே தொடரும். வருமான வரிச் சோதனையின்போது பிடிபடும் கூடுதல் தங்கத்திற்கு 60% வரி விதிக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.  

மேலும், பழைய சட்டத்தின் படி,  திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும்,  திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கமும், வைத்திருக்கலாம். ஆண்கள் 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படமாட்டாது. அதுமட்டுமின்றி பரம்பரை நகைகள், பழைய தங்கக்கட்டிகளுக்கு வருமான வரி சட்டதிருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close