Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேற்கு வங்கத்தைப் புரட்டிப் போட்ட 'மம்தா' புயல்

நேற்று நள்ளிரவு மேற்கு வங்கம் மாநிலம் முழுக்கவே பெரும் பரபரப்பு கிளம்பியது. அம்மாநில சுங்கச்சாவடிகளில் ராணுவம் நிறுத்தப்பட, 'இது ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியா?' எனக் கேட்டு தலைமை செயலகத்தைவிட்டு வெளியேறாமல் புயலைக் கிளப்பினார் முதல்வர் மம்தா பானர்ஜி. ராணுவமோ, 'இது வழக்கமான வாகனக் கணக்கெடுப்பு பணிதான்' என சொல்கிறது. 'மற்ற மாநிலங்கள் இப்படி ஏதும் நடக்காதபோது, ஏன் மேற்கு வங்கத்தில் மட்டும் இந்த நடவடிக்கை?' என தொடர்ந்து கேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறார் மம்தா. 

இன்று பாராளுமன்றத்தில் இதை பெரும் பிரச்னையாக கிளப்ப உள்ளார்கள் திரிணாமுல் கட்சியினர். மம்தா பானர்ஜி தற்போதுவரை அம்மாநில தலைமை செயலகத்தில் உள்ளேயேதான் இருக்கிறார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ