Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலையே' - டெல்லி காவல்துறை

muthukrishnan

டெல்லி, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவரான, சேலம் பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் முத்துக்கிருஷ்ணன், கடந்த 13-ம் தேதி வளாகத்தில் உள்ள அவரது நண்பரின் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அவரது தந்தை ஜீவானந்தம் டெல்லி போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில், வழக்கு பதிவுசெய்து விசாரித்தது டெல்லி போலீஸ்.

விசாரணைக்குப் பின், முத்துக்கிருஷ்ணன் மரணத்தை தற்கொலைதான் எனக் கூறியுள்ளது டெல்லி போலீஸ். 'உடற்கூறு ஆய்வில் அவரது உடலில் காயங்கள்  ஏதும் இல்லை' எனவும் தெரிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்து வந்த முத்துக்கிருஷ்ணனின் உடற்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close