Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா..?

Currency

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்தது மத்திய அரசு. மேலும், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. 

தற்போது, பணப் புழக்க நிலைமை ஓரளவு சீராகி இருக்கும் நிலையில், மத்திய அரசு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவைப் பற்றிய விவரத்தைத் தெரிவித்துள்ளது. 

'புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க 2.87 ரூபாயில் இருந்து 3.77 ரூபாய் வரை செலவாகிறது. குறிப்பாக, 500 ரூபாய் நோட்டை அச்சடிக்க 2.87 ரூபாயில் இருந்து 3.09 ரூபாய் வரை செலவாகிறது. அதேபோல, 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க 3.54 ரூபாயில் இருந்து 3.77 ரூபாய் வரை செலவாகிறது' என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெகாவால் தெரிவித்துள்ளார்.

மேலும், 'நவம்பர் 8-ம் தேதியில் இருந்து அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளுக்கு மொத்தமாக ஆன செலவைப் பற்றிக் கூறுவது கடினம். ஏனென்றால், இன்னும் அந்தப் பணி முடிவடையவில்லை' என்று கூறினார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close