Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தற்காலிக பொதுச் செயலாளர் பதவியே கிடையாது'- தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் அணி கறார் பதில்

OPS

ஓ.பன்னீர்செல்வம் இன்று தன் ஆதரவாளர்களுடன், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 'இரட்டை இலை' சின்னம் தொடர்பாக நிலவிவரும் குழப்பம் ஆகியவை குறித்துத் தீர்வுபெற, தேர்தல் ஆணையர் நசிம் சைதியைச் சந்திக்க டெல்லி சென்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'கட்சி விதிப்படி சசிகலாவின் நியமனம் செல்லாது. 'இரட்டை இலை' சின்னம் எங்கள் அணிக்கே ஒதுக்கப்படும். டி.டி.வி. தினகரன் மீது ஃபெரா வழக்குகள் இருப்பதால், அவரது மனுவைத் தள்ளுபடிசெய்ய கோரிக்கை வைத்துள்ளோம்.' என்று கூறினார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் தரப்பு சமர்பித்த ஆவணங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அ.தி.மு.க-வில் கிடையாது. அப்படி இருக்கும்போது, அவர் உத்தரவுகள் யாவும் செல்லாமல் ஆகின்றது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், ஒரே நாளில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது முறைகேடானது. அவர் மேல், ஃபெரா வழக்கு உள்ளது என்பதைக் கவனத்தில்கொள்ள வேண்டும். மேலும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் தேர்தல், தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் நடக்க வேண்டும். உண்மை அ.தி.மு.க நாங்கள்தான்.' என்று ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்தை நேரில் சென்று கோரிக்கை வைத்துள்ளது.

அ.தி.மு.க-வில் நிலவிவரும் குழப்பம் குறித்து, இரு தரப்பினரிடமும் விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம். இதையடுத்து, வரும் 20-ம் தேதிக்குள் இது குறித்த முடிவைத் தேர்தல் ஆணையம் கூறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close