Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம்?

Narendra Modi

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், வரும் ஏப்ரல் 12-ம் தேதிக்குப் பிறகு சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. தற்போது, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்துவருகிறது. இந்தக் கூட்டத் தொடர், அடுத்த மாதம் 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா மாநில முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து, பாதுகாப்புத்துறை பொறுப்பும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு ஒதுக்கப்பட்டது. இது, அவருக்கு கூடுதல் பளுவாக இருக்கும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம் பற்றிய தகவல்கள் கசிகின்றன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அமைச்சரவை மாற்றத்தின்போது, சில புதிய எம்பி -க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close