Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சுகாதாரத்துறை முதலீடுகளுக்கு முக்கியத்துவம்' - நட்டா

பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

J.P Nadda

இந்நிலையில், இது குறித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, மக்களவையில் பேசுகையில், 'இதன்மூலம் சுகாதாரத்துறையிலான முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அரசு சுகாதார மையங்கள் மூலம், அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மருத்துவ சேவை வழங்கப்படும். குறிப்பாக, பழங்குடியினர் மற்றும் ஏழை மக்களுக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த சுகாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, இந்த கொள்கை மூலம் அரசு மருத்துவமனைகளில், இலவச மருந்து, நோய்களை கண்டறிதல், ஆபத்து கால சிகிச்சை போன்றவை மேம்படுத்தப்படும்' என்றார்.

இந்த சுகாதாரக் கொள்கைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close