Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொல்கத்தாவில், அனைத்து போக்குவரத்துக்கும் இனி ஒரே கார்டு!

லண்டனில், அனைத்து போக்குவரத்துகளுக்கும் ஒரே பாஸ் (Pass) உள்ளது போல கொல்கத்தாவிலும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, அந்த மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்து போக்குவரத்துகளுக்கும் இனி ஒரே பாஸ் எடுத்தால் போதும். இதற்கு, 'வெஸ்ட் பெங்கால் ட்ரான்ஸ்போர்ட் கார்டு' எனப் பெயரிட்டுள்ளனர். ஆனால், இதில் மெட்ரோ ரயில் சேவை மட்டும் இணைக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் சேவை மத்திய அரசுக்கு கீழ் உள்ளதால், அது இணைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Kolkata

இந்த கார்டு மூலம், கொல்கத்தாவில் பேருந்துகள், டிராம் மற்றும் படகு சவாரிக்கு இனி ஒரே கார்டு போதுமானது. முதல் கட்டமாக இந்த கார்டு, ஐந்து பேருந்து நிலையங்களில் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேலும், 20 பேருந்து நிலையங்களில் இந்த கார்டு வழங்கப்படும் என்று மாநில அரசு கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close