Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேள்வி எழுப்பும் மிஷேல் ஷாஜி பெற்றோர்கள்

 மிஷேல் ஷாஜி

இலஞ்சியைச் சேர்ந்த மிஷேல் ஷாஜி தற்கொலை செய்துகொண்டதாகவும் அவர், குரோன் என்பவரைக் காதல் செய்ததாகவும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இதனை மறுத்த மிஷேலின் அப்பா, காவல்துறையினருக்கு ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மிஷேல் ஷாஜி மார்ச் 5-ம் தேதி மாலையில் காணாமல்போனார். அவரை கடைசியாக சர்ச்சில் பார்த்துள்ளனர். பின்னர், மார்ச் 6-ம் தேதி, எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஏரியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, அவருடன் சத்தீஸ்கரில் வேலைபார்த்த குரோனின் அலெக்ஸாண்டர் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர், மிஷேலின் தற்கொலைக்குக் காரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டார். இந்நிலையில், மிஷேல் தற்கொலை செய்யவில்லை என்றும் காவல்துறையின் விசாரணை மீதும் மிஷேலின் அப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், மிஷேலின் காதலனாகக் குறிப்பிடப்படும் குரோனுக்கு, மிஷேல் குறுஞ்செய்தி அல்லது போன் செய்ததற்கான ஆதாரங்களைக் காட்ட முடியுமா? மிஷேல் தனது உறவினர்கள் யாரிடமும் அவளது காதல் குறித்து தெரிவிக்கவில்லையே? மிஷேல் காணாமல்போனதாக மார்ச் 5-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக போன்மூலம் பின்தொடர்ந்திருந்தால், மிஷேலின் மரணத்தைத் தடுத்திருக்கலாம். காவல்துறை ஏன் அதைச் செய்யவில்லை? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார். மிஷேல் ஷாஜியின் மரணம், கேரளாவில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close