Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாதிரியார் செய்த பாலியல் குற்றத்தை மூடி மறைத்த கன்னியாஸ்திரிகள் சரண்!

கேரளாவின் கன்னூர் நகரில்  உள்ள தேவாலயத்தில் பணிப்புரிந்த ராபின் வடக்குன்செரில் (48)  என்பவர்,  16 வயதுச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக இரண்டு வாரங்களுக்கு முன் கைதுசெய்யப்பட்டார்.

Robin
 

இதனால், அவர் உடனடியாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.  இது தொடர்பாக,  பாதிரியார் அந்தக் குடும்பத்துக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியிருந்தார். ராபின் பாலியல் பலாத்காரம் செய்தது, அங்கிருந்த கன்னியாஸ்திரிகள், மற்ற பாதிரியார்களுக்குத் தெரிந்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.

சிறுமி, காவல்துறைக்குக் கடிதம் எழுதிய பின்னர்தான், இந்தச் சம்பவம் வெளியே வந்துள்ளது. இந்நிலையில்,  ராபின் செய்த குற்றத்தை மூடி மறைத்ததாகக் கூறப்பட்ட பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரிகள், இன்று காலை  தாமாக முன் வந்து, கன்னூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close