Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நடிகர் அக்ஷய் குமார் ரூ.1.08 கோடி உதவி!

ஒடிஷாவில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த 12 துணை ராணுவப்படை வீரர்களின் குடும்பத்துக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 

வீரர்களுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் அக்ஷய் குமார்

பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார். நாட்டு நலனில் அக்கறை கொண்டவர். முறையாக வருமான வரி கட்டும் நடிகர்களில் இவரும் ஒருவர். மிகச்சிறந்த கராத்தே வீரர். சமூக நலப்பணியிலும் ஈடுபடுகிறார். இவர் தந்தை முன்னாள் ராணுவ வீரர். ராணுவத்தில் சேர்வதுதான் அக்ஷய் விருப்பமும் கூட. ஆனால், பாலிவுட் ஸ்டாராகி விட்டார். நாட்டுக்கு ஒரு பிரச்னை என்றால் பாலிவுட்டில் இருந்து எழும்பும் முதல் குரல் இவருடையதாகத்தான் இருக்கும். அண்மையில், பாதுகாப்புத்துறைச் செயலாளர் ராஜீவ் மகரிஷியை சந்தித்த அக்ஷய் குமார், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்பவர்களுக்கு உதவி புரிவதற்கு ஒரு மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கப் போவதாகவும், அவர்களுக்கு உதவி செய்ய விரும்பும் மக்கள் அதன் வழியாக நிதியுதவி வழங்க முடியும் என்றும் விருப்பம் தெரிவித்திருந்தார். 

கடந்த நவம்ரில் காஷ்மீருக்கு சென்று, ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், பாதுகாப்பு படையினரிடையே உரையாற்றிய அக்ஷய் குமார், 'நாங்கள் எல்லாம் ரீல் ஹீரோ... நீங்கள்தான் ரியல் ஹீரோ' என எல்லை பாதுகாப்புப் படை வீரர்களை உற்சாகப்படுத்தினார். அந்த சமயத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு 89 லட்ச ரூபாய் நிதி அளித்தார்.  நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் வீரர்களின் குடும்பத்துக்கு ஆதரவு அளிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வரிசையில் சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பலியான துணை ராணுவப் படை வீரர்களின் குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளித்துள்ளார்.

சத்தீஸ்கரில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 11ம் தேதி ) அந்த சம்பவம் நிகழ்ந்தது. அங்குள்ள சுக்மா மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்தது. இந்த மாவட்டத்தில் பெஜ்ஜி வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. நக்சல்களால் சாலை அமைக்கும் பணியில்  ஈடுபடுபவர்கள் தாக்கப்படலாம் என்பதால், துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். பாதுகாப்பு பணிக்காக, 219-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள் சிலர் அங்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகள் வீசித் தாக்கினர். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 12 வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தி விட்டு துப்பாக்கிகள், ஆயுதங்களை நக்சல்கள் கொள்ளையடித்து விட்டு காட்டுக்குள் தப்பி விட்டனர். 

இந்த தாக்குதலில் இறந்தவர்கள் குறித்து நடிகர் அக்ஷய் குமார், வருத்தம் தெரிவித்திருந்தார். ஜெய்சால்மர் வடக்கு பகுதி டி.ஐ.ஜி அமீத் லோதாவைத் தொடர்பு கொண்டு பலியானவர்களின் குடும்பத்தினர் அவர்களது உறவினர்களின் முகவரி மற்றும் வங்கிக் கணக்குகளை கேட்டிருந்தார். அவர் கேட்ட விவரம் அளிக்கப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை பலியானவர்களின் உறவினர்களின் கணக்குகளில் தலா ரூ.9 லட்சம் அக்ஷய் குமார் தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது. அக்ஷய் குமாரின் நற்செயலை செயலை சோசியல் மீடியாக்கள் பாராட்டி வருகின்றன. சென்னை பெரு வெள்ளத்தின் போதும் அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

-எம்.குமரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close