Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கும் `டங்கல்` சகோதரிகள்!

வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி டெல்லியில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பாக `டங்கல்` திரைப்பட புகழ் `கீதா, பபிதா` சகோதரிகள் பிரசாரம் செய்ய உள்ளனர். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் வென்று உற்சாகத்தில் இருக்கும் பாஜக கட்சி தற்போது டெல்லி உள்ளாட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

இந்தத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை தங்களது பிரசாரத்துக்குப் பயன்படுத்த பாஜக கட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி டங்கல் படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நிஜ டங்கல் சகோதரிகளான கீதா மற்றும் பபிதா ஆகியோர்களை தங்களது பிரசாரங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் விரைவில் பிரதமர் மோடி பிரசாரத்தில் களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close