Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாஜக-வுக்கு சவால்விடும் மம்தா பானர்ஜி!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் வெற்றி அடைந்ததை அடுத்து பாஜக தனது பலத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் பரப்ப திட்டமிட்டுள்ளது. இதன்படி பாஜக கட்சி ஆட்சி அமைக்க சவாலாக இருக்கும் மாநிலங்களான தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா போன்றவற்றில் கவனம் செலுத்த உள்ளது.

ஆனால் பாஜக கட்சிக்கு மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்றும் எண்ணம் ஏதேனும் இருந்தால் அதை அடியோடு மறந்துவிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது `பாஜக கட்சியால் மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அவ்வாறு ஆட்சி அமைக்க விரும்பினால், நான் இந்தியா முழுக்க உள்ள பாஜக கட்சியை கைப்பற்றுவேன்.` என்று சவால் விடுத்துள்ளார்.

 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close