Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜே.கே.எல்.எஃப் தலைவர் யாசின் மாலிக் கைது

ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஶ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏப்ரல் 9 மற்றும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று யாசின் மாலிக் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

துண்டு பிரசுரங்கள், பொதுக்கூட்டம் உள்ளிட்ட முறைகளின் மூலம் தேர்தல் புறக்கணிப்பு பற்றி மக்களிடம் பேசினார். இதைக் காரணமாக கொண்டு அபி குஷர் பகுதியில் உள்ள ஜம்மு- காஷ்மீர் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் வைத்து யாசின் மாலிக்கை காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து யாசின் மாலிக் கூறுகையில், 'தேர்தலில் ஓட்டு போடுவதும், தேர்தல் புறக்கணிப்பது ஜனநாயக உரிமை. ஆனால் தேர்தலின்போது, வாக்களிப்பதை புறக்கணித்தால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்படுகிறது' என்றார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close