Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டும் முகேஷ் அம்பானி

Mukesh Ambani

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியா டுடே விழாவில் உரையாற்றியபோது பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினார்.

அம்பானி, 'இன்றைய இந்திய உயரியதாக இருக்கிறது. நாளைய இந்தியா அற்புதமாக இருக்கும். வரும் காலங்களில், நம் ஆதார் அடையாளத்தை வைத்து மொபைல் போன் மூலம் சில நிமிடங்களில் கடன் வாங்க முடியும். நம் நாட்டின் பிரதமர், மக்களை மட்டும் புரிந்து கொள்பவராக இல்லாமல், உலகம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிவும் இருப்பவராக உள்ளார்.' என்று பேசினார்.

மேலும் அம்பானியிடம், அரசியலில் ஈடுபட விருப்பம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, 'அரசியல் என்னுடைய பலம் இல்லை என்று நினைக்கிறேன்' என்று பதிலளித்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close