Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தரப்பிரதேசத்துக்கு இரண்டு துணை முதல்வர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு இரண்டு துணை முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Deputy Chief minister for Uttarpradesh

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. அரசு இன்று பொறுப்பேற்கிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், பா.ஜ.க-வின் கேசவ் பிரசாத் மவ்ரியா மற்றும் தினேஷ் ஷர்மா ஆகியோர் அம்மாநிலத்தின் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர். இதற்கான பதவியேற்பு விழா, இன்று மதியம் 2.15 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதன்மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின் அங்கு மீண்டும் பா.ஜ.க ஆட்சியமைக்க உள்ளது.

முன்னதாக, யோகி ஆதித்யநாத், அம்மாநில அரசு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பதவியேற்பு விழாவின் காரணமாக லக்னோவில் பா.ஜ.க. தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், 'கொண்டாட்டம் என்ற பெயரில் தொண்டர்கள் தவறாக செயல்படக் கூடாது' என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close