Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீ விபத்தில் தோனியின் மூன்று செல்போன்கள் மிஸ்ஸிங்

டெல்லி வெல்கம் ஹோட்டலில் நடந்த தீ விபத்தில், தோனியின் மூன்று செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.

Dhoni

விஜய் ஹசாரே கோப்பைக்காக தோனி, டெல்லி துவாராகா பகுதியில் உள்ள வெல்கம் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில், அங்கு நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தோனி உள்ளிட்டோர் விபத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதனால், அன்றைய தினம் நடைபெற இருந்த ஜார்க்கண்ட், பெங்கால் அரையிறுதிப் போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் ஜார்க்கண்ட் அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில், இந்த தீ விபத்தின்போது தோனியின் மூன்று போன்கள் திருடப்பட்டுவிட்டதாம். இது குறித்து தோனி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close