Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி ஜந்தர் மந்தரில் 6-வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி. டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்

Farmers Protest Delhi Jantarmantar

இந்நிலையில், டெல்லி, ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள், தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும், தொடர் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இன்று பட்டையடித்து, கையில் சட்டி ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளனமான பெண்களும் கலந்து கொண்டனர்.

முக்கியமாக தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது வரை மத்திய, மாநில அரசுகள் தங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close