Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உ.பி.யில் பாஜக அரசு பதவியேற்ற நாளில் பகுஜன் சமாஜ் பிரமுகர் சுட்டுக்கொலை!

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில் பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ள  சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு நேற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

Shami

இந்நிலையில், அலகாபாத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த நிர்வாகி முகமது சமி, மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சமியின் வீட்டின் அருகிலேயே அவரைச் சுட்டுக் கொன்றனர்.  இதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளே, நடந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகமது சமி, சமாஜ்வாதி கட்சியில் இருந்து, இந்தத் தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். மேலும், குந்தா தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டவர் ஆவார். இந்தத் தேர்தலிலும் சுயேச்சை எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங்கை எதிர்த்து சமி, குந்தா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close