Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம், நாடாளுமன்ற நூலக வளாகத்தில் இன்று தொடங்கியது. ஆலோசனைக் கூட்டத்தில், ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Modi, Jaitley
 

நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டுவரும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) யை அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்துவருகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில்  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், டெல்லியில் நடைபெற்றது.  ஜூலை 1-ம் தேதி, ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கான அறிவிப்பை இறுதிசெய்ய உள்ளதாக ஜெட்லி அறிவித்தார். மேலும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்துவதற்கான புதிய சட்டத்துக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்குத் தேவையான ஈட்டுறுதிச் சட்டம் (Compensation Law), மத்திய ஜிஎஸ்டி (Central-GST), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (Integrated-GST), யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (Union Territory-GST), ஆகிய நான்கு துணை மசோதாக்கள் குறித்து ஆலோசனைசெய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வெகுவிரைவில் ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close