Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கடல் வாழ் உயிரினங்கள் அழிவுக்கு வழிவகுத்த எண்ணெய்க் கசிவு... மத்திய அரசின் திடுக் ரிப்போர்ட்!!!

சென்னை, எண்ணெய்க் கசிவால்,  குறிப்பிட்ட கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் ஆலிவ் ரிட்லி ரக ஆமைகள் மரணித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.

 Oil spill

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் அருகே, ஜனவரி 28-ம் தேதி எம்டிபிடபிள்யூ. மேப்பிள் மற்றும் எம்டிடான் காஞ்சிபுரம் ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால், கடற்பகுதிகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, கடலில் கசிந்த எண்ணெய் அகற்றப்பட்டது. எண்ணெய்க் கசிவின் விளைவாக, ஏராளமான கடல்வாழ் உயிரினங்களும் பறவைகளும் பாதிக்கப்பட்டன. 

இந்தச் சம்பவம் தொடர்பாக, சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சஸ்டெய்னபிள் கடற்கரை மேலாண்மை தேசிய மையம் (NCSCM) சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வு முடிவுகளை, மாநிலங்களவையில் அனில் மாதவ் தவே சமர்ப்பித்தார். ஆய்வு அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை பின்வருமாறு...

*எண்ணெய்க் கசிவால், கடல் நீரில் மொத்த பெட்ரோலியம் ஹைட்ரோகார்பன் (Total Petroleum Hydrocarbon) அளவு அதிகரித்துள்ளது.

*எண்ணெய் கசிந்த பகுதிகளுக்கு அருகில் இருந்த கற்பாறைகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

*ஆலிவ் ரிட்லி ரக ஆமைகள் அதிக அளவில் மரணத்துள்ளன. 

*குறிப்பிட்ட கடல் வாழ் உயிரினங்கள் (mussels,rock oyster) பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், எண்ணெய்க் கசிவு அகற்றப்பட்டு, கடல் வாழ் உயிரினங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close