Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டம் வாபஸ்!

delhi farmers protest

கடந்த ஏழு நாட்களாகத் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவந்த தமிழக விவசாயிகளின் போராட்டம், வாபஸ் பெறப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடந்துவந்தது.

radhamohan

இன்று மாலை, மத்திய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியிருந்தார். விவசாயக் கடனை கட்டாயப்படுத்தி வசூலிக்கக்கூடாது எனவும் அதில் வலியுறுத்தினார். மேலும், அவர் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் கடிதம் எழுதினார். தொடர்ந்து, தமிழகத்துக்கு அளிக்கப்படும் வறட்சி நிவாரணம் குறித்து முடிவு செய்ய, மார்ச் 23-ல் உயர்நிலைக் கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close