Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 122-வது இடம்!

வ்வொரு வருடமும், உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று 'வேர்ல்டு ஹேப்பினஸ் ரிப்போர்ட்' பட்டியலிட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம், அரசியல்,  மற்றும் தனிப்பட்ட வாழக்கை என அனைத்திலும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடு எது? என்ற அடிப்படைத் தகுதிகளோடு கணக்கிடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இந்த வருடம் நார்வே முதல் இடத்தையும், டென்மார்க் இரண்டாவது இடத்தையும், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகள் முறையே மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தையும் பெற்றிருக்கின்றன. இந்த வகையில், இந்தியா 122-வது இடத்தையும், பாகிஸ்தான் 80 வது இடத்தையும், நேபாளம் 99-வது இடத்தையும், ஸ்ரீலங்கா 110 வது இடத்தையும் பெற்றிருக்கின்றன.

சென்ற வருட கணக்கின்படி நார்வே நான்காவது இடத்திலும், இந்தியா 118 வது இடத்திலும் இருந்தது. 155 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின்படி நார்வே அரசு தனது மக்களை மகிழ்சியாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தியதால், நான்காம் இடத்திலிருந்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்ற காரணத்தினால், சென்ற ஆண்டு 118-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு  122 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close