Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கங்கை யமுனை நதிகளுக்கு, ’வாழும் மனிதர்’ அந்தஸ்து. உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பு!

கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு, ’உயிர் வாழும் மனிதர்கள்’ (living human entities) என்னும் அந்தஸ்தை வழங்கி, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நியூசிலாந்தில் கடந்த வாரம் ’Whanganui’ என்னும் நதிக்கு உயிர்வாழும் அந்தஸ்து வழங்கப்பட்டதை மேற்கோள்காட்டி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Gangai yamuna, living entities
 

புனித நதிகள் என்று அழைக்கப்படும் கங்கை மற்றும் யமுனையில், சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து, அவற்றின் தன்மையை இழக்கச் செய்துவிட்டது. யமுனையில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால், கரைநிலை ஆக்ஸிஜன் (dissolved oxygen) அளவு மிகவும் குறைந்துவிட்டது. மற்றொரு புறம் கங்கை ஆற்றின் கரைகளில் உள்ள சுரங்கங்களில், சட்டவிரோதமாக கல் உடைப்பு நடைபெற்று வருகிறது.

கங்கை ஆற்றின் கரைகளில் நடைபெறும் சட்டவிரோத கல் உடைப்பை எதிர்த்து, ஹரித்வாரில் வசிக்கும் முகமது சலீம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போதுதான், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் சர்மா, அலோக் சிங் அமர்வு கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு உயிர் வாழும் மனிதர்கள் அந்தஸ்தை வழங்கி உள்ளது. கங்கையைச் சுத்திகரிக்கும் நமாமி கங்கைத் திட்டத்தின் இயக்குநர் மற்றும் உத்தரகாண்ட் தலைமை வழக்கறிஞரை கங்கை, யமுனை நதிகளின் பெற்றோர்களாக நியமித்துள்ளனர். இரு நதிகளையும் தூய்மைப்படுத்தி, பாதுகாக்கவே இந்தப் புதிய முயற்சி.

 இதனால் என்ன பயன்?

*கங்கை, யமுனை இப்போது உயிர் வாழும் மனிதர்கள் அந்தஸ்து பெற்றுள்ளதால், அவற்றின் சொத்துகளை மனிதர்கள் சட்டவிரோதமாக சுரண்ட முடியாது. நதிகளின் கரைகளில் உள்ள சுரங்கங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். பெற்றோர்களாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் அனுமதி இல்லாமல், தனிப்பட்ட தேவைக்கு நதிகளைப் பயன்படுத்த முடியாது. சுரங்கங்களில் உள்ள கற்களை உடைப்பதால், வெள்ள அபாயம் அதிகரித்துவருகிறது. இனி, இந்தச் சூழல் முற்றிலும் தவிர்க்கப்படும்.

*சுத்திகரிப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

இந்தத் தீர்ப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? - பிறந்ததின சிறப்புப் பகிர்வு
Advertisement

MUST READ

Advertisement
[X] Close