Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இரட்டை இலை' சின்னம்: தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு பதில்

'இரட்டை இலை' சின்னம் தொடர்பாக, சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Sasikala

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சசிகலா அணி, ஓ.பன்னிர்செல்வம் அணி, தீபா அணி என்று மூன்றாகப் பிரிந்தது. இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டது தொடர்பாக, பன்னீர்செல்வம்  ஆதரவு எம்பி-க்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதுகுறித்து, சசிகலா அணி விளக்கமளிக்கத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பிறகு, சசிகலா விளக்கத்துக்கு, பன்னீர்செல்வம் அணியும் தேர்தல் ஆணையத்துக்கு விளக்கமளித்தது.

இந்நிலையில், 'இரட்டை இலை' சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, பன்னீர்செல்வம் கடந்த வாரம் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்தார். பின்னர், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக விளக்கமளிக்க, சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, முதலில் 20-ம் தேதிக்குள் (நேற்று) விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், பதிலளிக்க அவர்களுக்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. சசிகலா தரப்பு, தேர்தல் ஆணையத்தில் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், 'பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு எங்களுக்குதான் உள்ளது. எனவே, எங்களுக்குதான் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க வேண்டும்' என்று சசிகலா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நாளை சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரையும் தேர்தல் ஆணையம் நேரில் விசாரிக்க உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close