Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுலா, தீவிரவாதம்... இளைஞர்களின் தேர்வு குறித்து மோடியின் கூற்று சரியா? உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

மோடி

ந்தியாவின் மிக நீளமான சுரங்கவழி சாலையான செனானி - நஷ்ரியை, ஜம்மு-ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏப்ரல் 2-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜம்முவையும், ஶ்ரீநகரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், 30 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த வழித்தடத்தில் பயணம் செய்வோரின் பயண நேரம் சுமார் 2 மணி நேரம் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "காஷ்மீர் மாநில இளைஞர்கள் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்க போகிறீர்களா; இல்லை. தீவிரவாதத்தை தேர்தெடுக்கப் போகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "தவறான வழிகாட்டுதல்களினால், சில இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி கல் எறிந்து கொண்டிருக்கிறார்கள்; வேறு சிலரோ சுரங்கப்பாதைக்காக, கல் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார். பிரதமரின் இத்தகைய பேச்சு காஷ்மீர் இளைஞர்கள் மட்டுமல்லாது அம்மாநில மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது சரியா? என்பது பற்றிய சர்வேயில் கலந்து கொண்டு உங்களை பதிலை தெரிவியுங்கள்...

சுற்றுலா, தீவிரவாதம்... இளைஞர்களின் தேர்வு குறித்து மோடியின் கூற்று சரியா? உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey

 

1). 'இளைஞர்களின் பாதை, சுற்றுலாத்துறையா; தீவிரவாதமா?' என்று மோடி கேள்வி எழுப்பிருப்பது? *

2). காஷ்மீர் இளைஞர்கள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள்? *

3). இளைஞர்களிடையே மோடியின் பேச்சு..? *

4). இந்திய இளைஞர்கள் பற்றிய உங்கள் கருத்தை ஓரிரு வார்த்தைகளில் தெரிவியுங்கள் *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

 

 

 

 - நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close