Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநிலங்களவையில் மோடி அரசை விளாசிய அமிதாப் பச்சன் மனைவி!

பசு பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் பா.ஜ.க, பெண்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளார் சமாஜ்வாதி எம்.பி ஜெயா பச்சன்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைக்கு 11 லட்சம் விலை என பா.ஜ.கவின் யோகேஷ் வர்ஸ்னே கருத்துக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெயா

மேற்கு வங்கத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஹிந்து அமைப்புகளால் முறையான அனுமதி பெறாமல் பேரணி நடத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது. காவல்துறையின் தடியடியை கண்டித்த 'பாரதிய ஜனதா யுவ மோர்சா’ அமைப்பின் இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டு வருவோருக்கு 11 லட்சம் சன்மானம் வழங்குவேன் என கூறியிருந்தார்.

பா.ஜ.க தலைவரின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜெயா பச்சனும், யோகேஷ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயாபச்சன் மாநிலங்களவையில் கூறியதாவது, ' பா.ஜ.க ஆட்சியில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள். பா.ஜ.க தலைவரின் பேச்சு பாதுகாப்பின்மையை அதிகரிப்பதாக உள்ளது' என கூறியுள்ளார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி,' இத்தகைய கருத்துகளை வன்மையாக கண்டிப்பதாகவும், மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம்' எனவும் கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close